தென்காசி அருகே ஆண் சடலம் மீட்டு: போலீசார் விசாரணை

தென்காசி அருகே ஆண் சடலம் மீட்டு: போலீசார் விசாரணை
ஆண் சடலம் மீட்டு: போலீசார் விசாரணை
தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாத ரயில்வே பாலம் அருகே நேற்று மாலை உடல் ஓன்று கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ரயில்வே மேட்டு தெரு பகுதியில் வசித்து வரும் சின்னதம்பி என்பவர் என தெரியவந்தது. இது குறித்து போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீசார் கொலையா தற்கொலையா என பல்வேறு கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story