விக்னேஸ்வரா நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
விக்னேஸ்வரா நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், தாந்தோணி மலை, விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் எட்டிதுரை மனைவி காயத்ரி வயது 27. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வசிக்கும் விக்னேஸ்வரா நகரில் தந்தையின் வீடு அருகே வசித்து வந்தார் காயத்ரி. இதனிடையே கடந்த இரண்டு வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி காலை 7:30 மணியிலிருந்து 8- மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த காயத்ரியின் தந்தை சுப்பிரமணி வயது 52 என்பவர் அளித்தபுகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த காயத்ரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோனிமலை காவல்துறையினர்.
Next Story




