கோவை: பேருந்தில் மாரடைப்பால் கூலித் தொழிலாளி உயிரிழப்பு !
Coimbatore King 24x7 |20 Dec 2024 1:21 PM GMT
ஓடும் பேருந்தில் தொழிலாளி மாரடைப்பால் மரணம் அடைந்தது கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோவை, வடவள்ளி கல்வி வீரம்பாளையம் விஜயநகர் பகுதியில் குடியிருப்பவர் அய்யாசாமி (52). கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்து உள்ளார். இன்று காலை தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல அவரும் அவரது மனைவி மாரம்மாளும் கல்வீரம்பாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஏறி உள்ளனர். தொண்டாமுத்தூர் அருகே பேருந்து வந்த போது ஐயா சாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. வலியால் துடி, துடித்து உள்ளார். உடனடியாக பேருந்து ஓட்டுனரிடம் கூறி அரசு மருத்துவமனைக்கு பேருந்து விரைந்து கொண்டு சென்றனர். அதற்குள் மயங்கி பேருந்து இருக்கையில் சாய்ந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story