லாரி கவிழ்ந்து விபத்து
Erode King 24x7 |21 Dec 2024 11:27 AM GMT
அந்தியூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர், கிளீனர் படுகாயம்
கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற் றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண் டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த அன்பு (வயது 39) என்பவர் ஓட்டினார். கிளீனராக வெங்கடாசலம் (49) இருந்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் அன்பு, கிளீனர் வெங்கடாச லம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாற்று லாரி வரவழைக்கப்பட்டு கரும்பு பாரம் அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story