மனைவி கண்டிப்பு. கணவர் தற்கொலை.

மனைவி கண்டிப்பு.  கணவர் தற்கொலை.
X
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை கலைவாணர் நகர் பாரதிதாசன் தெருவில் குடியிருக்கும் முருகனின் மகன் காளி ராஜன் (37) என்பவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.நேற்றும் (டிச.22) குடித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது மனைவி கண்டித்ததால் விரக்தி அடைந்த காளிராஜன் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகிறார்கள்.
Next Story