தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு
நாகை மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ட்ரோன் பயன்பாடு, தொழில்நுட்பம், புதிய பயிர் ரகங்கள், தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கம் ஆகியவை தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையம், நாகை மாவட்டத்திற்கு உகந்த விவசாய முறையாக இருக்கிறது. அதனை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். மண்வளத்தை ஆய்வு செய்து அதற்கு தகுந்தார் போல் தொழில்நுட்பங்கள் அளிக்க வேண்டும். புதிய பயிர் ரகங்கள் சாகுபடி செய்யும்போது,வெவ்வேறு மாவட்டங்களில் உண்டாகும் அதிக விளைச்சல் இடைவெளியை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும். விவசாயிகளின் தொழில்நுட்பம் சார்ந்த கோரிக்கைகளை, வேளாண்மை அறிவியல் நிலையங்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில், நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் பூச்சிகள், நோய்கள் கட்டுப்பாடு, நவீன மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்பங்கள், வேளாண் விளைப் பொருட்கள் மற்றும் மீனிலிருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். கூட்டத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வள பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ப.சிதம்பரம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் விரிவாக கல்வி அலுவலர் முனைவர். பத்மாவதி, நாகை வேளாண்மை இணை இயக்குனர் கே.கண்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (வேளாண் அறிவியல் நிலையம்) ஆ.கோபால கண்ணன், தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் சந்திரசேகர், முனைவர் கண்ணன், முனைவர் மதிவாணன் மற்றும் ரகு, ஞானபாரதி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் மருத்துவர் வினோதினி மற்றும் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



