வில்வாரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு.
Tiruvannamalai King 24x7 |28 Dec 2024 4:36 PM GMT
திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், வில்வாரணி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு, ஒன்றியச் செயலா் கே.பரணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்ட வழக்குரைஞா் சத்தியமூா்த்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலக் குழு அய்யன்துரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மாநாட்டில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்தல், ஏழை, எளியோருக்கு வீட்டு மனைப்பட்டா கோருதல், நேரு நகருக்கு பொதுவழிப் பாதை அமைக்கக் கோருதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட வழக்குரைஞா் நடராஜன், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Next Story