புத்தாண்டில் நடைபெற்ற முதல் மஞ்சுவிரட்டு இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

X
சிவகங்கை மாவட்டம், மதகு பட்டி அருகே கீழக்கோட்டையில் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மஞ்சு விரட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, திருப்பத்தூர். சிங்கம்புணரி, கல்லல், மதகுபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இளைஞர்கள் உற்சாகமாக மாடுகளை விரட்டி பிடித்தனர். இதில் சில மாடுகள் பிடிபட்டன. சில மாடுகள் யாரையும் நெருங்க விடாதபடி நின்று விளையாடின. மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Next Story

