ஒருவர் கைது

ஒருவர் கைது
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது
இந்திய அரசிடம் உரிய அனுமதி (விசா இன்றி) பெறாமல், ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்த பங்களாதேஷ் நபரை போலீசார் கைது செய்தனர்.பங்களாதேஷை சேர்ந்த நபர் இந்திய அரசின் உரிய அனுமதி பெறாமல் (விசா பெறாமல்) தங்கி வேலை செய்து வருவதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று காலை விளக்கேத்தி உச்சிமேடு பாலாஜி காயர்ஸ் என்ற நார் மில்லில் வேலை செய்து வந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நபரை நேற்று காலை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவரது பெயர் அபுல் பாஷர் சனா, 45. இந்த நார் மில்லில் கடந்த ஏழு ஆண்டாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அபுல் பாஷர் ஷேக் என்ற பெயரில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஜெயநகர் சோனாடிகிரி பாபுரேகா போஸ்ட் பகுதியில் ஏழு ஆண்டு வசித்துள்ளார். இவர் ஆதார் கார்டும் பெற்றுள்ளார். இவருக்கு இரு ம னைவிகள் உள்ளனர்.முறையான விசா உள்ளிட்ட ஏதுமின்றி இந்தியாவில் தங்கி இருந்தது தொடர்பாக, சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story