சேந்தமங்கலம்,வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

சேந்தமங்கலம்,வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காளப்பநாயக்கனபட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலிஜாவாரு பஜனை மடத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடை பெற்றது.
விழா முன்னிட்டு பஜனை மடத்தில் உள்ள மூலவர் ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமிக்கு காலையில் சிறப்பு பூஜையுடன் தொடங்கி யது. தொடர்ந்து 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் காலை 7 மணி அளவில் சுவாமிக்கு சிறப்பு அபிசேகமும்,அலங்காரமும் மற்றும் ஆராதனையும் நடைபெற்று பின் மூலவர் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் கருடாழ்வார் சிறப்பாக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படட்து. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story