வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த நபர்
Nagercoil King 24x7 |10 Jan 2025 4:21 AM GMT
நாகர்கோவில்
குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதி சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (54) நாட்டு வைத்தியர். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் விஜயகுமாரி வழக்கம் போல் வேலைக்கு செல்ல சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு வந்த போது ஜான் ஸ்டீபன் தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து அவர் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சாவில் மர்மம் இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் அவர் எப்படி இருந்தார் என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story