கோடியக்கரை ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை

கோடியக்கரை ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை
ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மும்மதத்தினர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை ஊராட்சியில், பொங்கல் பரிசு தொகுப்புகளை, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய மும்மத்தினரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். வழக்கமாக, கோடியக்கரை ஊராட்சியில் மும்மதத்தினர் இணைந்து ஆண்டுதோறும் காலங்காலமாக சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர். கோடியக்கரை மாரியம்மன் கோவில் வளாகத்தில், ஆண்டுதோறும் அனைவரும் சமத்துவ பொங்கலை நூற்றுக்கணக்கான இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றாக இணைந்து, பொங்கல் வைத்து ஒன்றாக அமர்ந்து பொங்கல் சாப்பிட்டு, ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களான அரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி சேலையை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். கோடியக்கரையில் உள்ள 650 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் அனந்தராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேற்று வழங்கினர். கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர்.
Next Story