பாலத்தை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை!

பாலத்தை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை!
பொது பிரச்சனைகள்
அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி செங்குளம் பேருந்து நிலையம் அருகே மெயின்ரோட்டில் இருந்து முக்கிய வீதிக்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் ஒன்று பெரிய அளவில் ஓட்டை விழுந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story