சௌந்தரராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு
Dindigul King 24x7 |10 Jan 2025 4:59 AM GMT
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெற்றது
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் 300 வருடங்களுக்கு மேல் பழமையான சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது அதிகாலை 5 மணிக்கு சௌந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் அர்ச்சனைகள் செய்யபட்டு பின்னர் சன்னதியில் இருந்து பெருமாள், உற்சவர் புறப்பட்டு பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சொர்க்க வாசல் என்றழைக்கப்படும் பரமபத வாசலை பெருமாள் வந்து அடைந்தார் அதனை தொடர்ந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சொர்க்கவாசல் திறக்கும் பொழுது பக்தர்கள் கோவிந்தா கோஷங்கள் எழுப்பினர். இன்று முழுவதும் கோவிலின் வடக்குப்புறம் உள்ள பரமபத மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாலையிலேயே திண்டுக்கல், வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் உட்பட வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட்டனர்.
Next Story