சோழவந்தானில் பரமபத வாசல் திறப்பு.

மதுரை சோழவந்தான் கோவிலில் இன்று பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று( ஜன.10) சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.இதற்காக ஆழ்வார்கள் திருப்பாசுரங்களுடன் வரவேற்க ,காலை 5.30 மணியளவில் ஜெனக நாராயணப் பெருமாள், ஸ்ரீ தேவி,பூதேவியருடன் சொர்க்க வாசல் வழியாக அருள்பாலித்தார். பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன்,பஜனைக் குழுவினரின் பாடல்களுடனும் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் ஊர்வலம் வந்த பெருமாளை பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். ஏற்பாடுகளை தலைவர் ராஜாங்கம் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர்,செயல் அலுவலர் சுதா,கணக்கர் முரளிதரன்,பட்டர் பார்த்தசாரதி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story