போலீஸ் தகவல்
Erode King 24x7 |10 Jan 2025 5:17 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 236 துப்பாக்கிகள் ஓரிரு நாளில் பெறப்படும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் இருந்து வருகிறது.இடைத்தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையில் நடத்திட போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்று கைத்துப்பாக்கி, இரட்டை குழல் துப்பாக்கி, ஒற்றை குழல் மற்றும் ரைபிள் துப்பாக்கி என மொத்தம் 236 துப்பாக்கிகள் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஓரிரு நாளில் பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. துப்பாக்கி உரிமையாளர்களிடம் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தி வருகிறோம். துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெற்ற பின் உரிமையாளர்களிடம் துப்பாக்கிகள் மீண்டும் ஒப்படைக்கப்படும். போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை ஆகியவற்றில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். ஓரிரு நாட்களில் இப்பணி நிறைவு பெறும் என மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தேர்தல் பறக்கும் படைக்கு தினமும் மூன்று குழுவுக்கு மூன்று போலீசார் அனுப்பி வைக்கப்படுவர். இதற்கான பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்தனர்.
Next Story