கோவை: பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது !

கோவை: பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது !
பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி இருவர் கைது. மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம்!
கோவை மாநகரில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபல கொள்ளையன் ரத்தன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் தலைமையிலான இந்த கும்பல், பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. கோவை காட்டூர், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் பல கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.பலூன் விற்பனையாளியாக நடித்து வீடுகளை நோட்டமிட்டு வந்த ரத்தன், தனது கும்பலுடன் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து, ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்வது வழக்கம். அங்கு நகைகளை விற்று பணத்தை பகிர்ந்து கொள்வார்கள்.கோவை மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் பல திருட்டு வழக்குகள் ரத்தன் மீது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.திருச்சியில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற ரத்தன், சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்து மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.ரத்தனுடன் 17 வயது சிறுவனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story