சூலூர்: கறிக்கோழி பண்ணைக்கு எதிர்ப்பு !

கறிக்கோழி பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியம், மலைபாளையம் கிராமத்தில் அனுமதியின்றி கறிக்கோழி பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் என்பவர் அரசு அனுமதியை மீறி சுற்றுப்புற சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் கறிக்கோழி பண்ணையை அமைத்து வருவதாகவும், இதனால் சுற்றுப்புறவாசிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.இன்று காலை முதல் வட்டாட்சியர் அலுவலகம் முன் குவிந்த விவசாயிகள், கறிக்கோழி பண்ணை கட்டுமானத்தை நிறுத்தி வைக்கக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினாலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.இந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகளின் கோரிக்கை குறித்து வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.
Next Story