வெண்ணமலை- காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு.

வெண்ணமலை- காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு.
வெண்ணமலை- காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு. கரூரை அடுத்த வெண்ணைமலை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி சுபா வயது 41. சுபாவிற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் வந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 8ஆம் தேதி அதிகாலை 3:15 மணி அளவில் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது மகன் தருண் வயது 18 என்பவர்,தனது தாயாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுபா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தருண், சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சபாவின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story