கோவை: இறைச்சி கடைகள் மூடல்- கோவை மாநகராட்சி உத்தரவு !
Coimbatore King 24x7 |10 Jan 2025 8:53 AM GMT
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மாட்டுக்கோழி மற்றும் பிற விலங்குகளை வதை செய்வது, விற்பனை செய்வது ஆகியவை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மாட்டுக்கோழி மற்றும் பிற விலங்குகளை வதை செய்வது, விற்பனை செய்வது ஆகியவை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. இதன்படி, வருகிற 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அகிம்சை கொள்கையைப் போற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அனைத்து இறைச்சி கடைகளின் உரிமையாளர்களும் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இந்த உத்தரவு கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும், அறுவை மனைகளையும் உள்ளடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story