தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
Ariyalur King 24x7 |10 Jan 2025 10:23 AM GMT
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது.
அரியலூர், ஜன.10- அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது காரைக்குறிச்சி, மதனத்தூர், கோடங்குடி, இடங்கண்ணி, தென்கச்சிபெருமாள்நத்தம், அணைக்குடம், அன்னங்காரன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மிதமான காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பெய்துள்ள மழை சம்பா நெல் நடவு செய்த வயல்களில் ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பல பகுதிகளில் தண்ணீர் இன்றி நெல் நடவு செய்த வயல்கள் காய்ந்து வந்ததால் தற்பொழுது பெய்த மழை நெல் பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
Next Story