ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
Nagercoil King 24x7 |10 Jan 2025 10:27 AM GMT
இரணியல்
குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலைய சந்திப்பு முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பிளாட்பாரத்தின் கடைசி பகுதியில் சாக்கு மூடைகள் கிடந்தன. இதையடுத்து அவற்றை சோதனை செய்த போது அதில் சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் செல்லும் ரயிலில் கடத்த திட்டமிட்டு ரயில் நிலையத்தில் வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றி நாகர்கோவில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த அரிசி மூட்டைகளை யார் கொண்டு வந்து வைத்தார்கள்? என்பது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story