திருமருகல் வரதராஜ பெருமாள் கோவிலில்
Nagapattinam King 24x7 |10 Jan 2025 10:36 AM GMT
சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான விளங்குகிறது. இக்கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌரிராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நடைபெறுவது வழக்கம். அதே போல் நடப்பாண்டும், இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌரிராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌரிராஜ பெருமாள் சப்பரத்தில் எழுந்தருள, கோவில் உள் பிரகாரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌரிராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போல், திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு உற்சவம் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அப்போது, வரதராஜ பெருமாள் சொர்க்க வாசலில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷம் எழுப்பிய படி பெருமாளை பின்தொடர்ந்து, சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, சம்பந்தம் குருக்கள், நில அளவையர் (ஓய்வு) ராமச்சந்திரன், பண்ணை சேகர் மற்றும் ஆலய நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Next Story