மார்த்தாண்டம் : சிறுமி கடத்தல் - போக்சோ

மார்த்தாண்டம் : சிறுமி கடத்தல் - போக்சோ
குமரி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 48 வயது தொழிலாளிக்கு 15 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சென்ற அரையாண்டு தேர்வு பின்னர் பள்ளிக்கு செல்லவில்லை.       இந்த நிலையில் சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பறைக்கோடு என்ற பகுதியை சார்ந்த ஐஜின் என்ற வாலிபர்  உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும் சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார். ஆனால் சிறுமி ரகசியமாக ஐஜினிடம் பேசி வந்துள்ளார். நேற்று முன்தினம்  இரவு சிறுமியை வாலிபர் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி, கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று 9-ம் தேதி  அதிகாலை சுமார் 4 மணியளவில் தந்தை பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த சிறுமியை காணவில்ல.        இதை எடுத்து சிறுமியின் தந்தை ஐஜின்  வீட்டில் சென்று பார்த்த போது அங்கு மகள் இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். சிறுமியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். சிறுமியிடம் விசாரித்த போது தனியறையில் அடைத்து வைத்து சில்மிஷம் செய்ததாக சிறுமி  தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக மாரத்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் ஐஜின் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story