தக்கலை : தாறுமாறாக ஓடி விபத்தான கார்
Nagercoil King 24x7 |10 Jan 2025 11:29 AM GMT
குமரி
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர் நட்டலம் தேவசகாயம் ஆலயத்திற்கு பேனர் வைப்பதற்காக நேற்று தனது காரில் மார்த்தாண்டத்திற்கு புறப்பட்டார். தக்கலை அருகே மணலி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலை ஓரம் வளைவான பகுதிகளை அம்புக்குறியிட்டு காட்டும் சிக்னல் இரும்பு போஸ்டர் மீது கார் மோதியது. இதில் அந்த கார் பலமுறை பல்டி அடித்து நின்றது. ஆனால் காரில் இருந்த ஏர்பேக் திறந்ததால் எட்வின் காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும் அந்த கார் கடுமையாக சேதம் அடைந்தது. காயமடைந்த எட்வின் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story