ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கார் செட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் கொள்ளை

ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு  வரும் கார் செட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் கொள்ளை
ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கார் செட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கார் செட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் கொள்ளை கார் ஷெட்டுக்குள் நுழைந்து கொள்ளையன் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் ஆம்பூர் விவேகானந்தா 2 வது தெரு பகுதியில் 21 ஆண்டு காலமாக கார் பழுது பார்க்கும் குடோன் வைத்து பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்றிரவு அந்த குடோனில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஷெட்டுக்குள் நுழைந்து கார் உதிரி பாகங்கள் செல்ப் மோட்டார், காப்பர் ஒயர், செம்பு கம்பிகள் போன்றவற்றை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். மேலும் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பதும் அடிக்கடி இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அதே பகுதியில் இருக்கும் இரும்பு கடையில் விற்று வருவதாகவும் இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் அவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் அவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ்வரா ரெக்கார்ட் பழுது பார்க்கும் குடோனில் இறங்கி சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்களை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்த வருகிறது
Next Story