இரவு நேர கடைகள் திறக்க அனுமதிக்க கோரிக்கை
Nagercoil King 24x7 |10 Jan 2025 12:22 PM GMT
கன்னியாகுமரி
. கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தார். அதன்படி இரவு 11 மணிக்கு மேல் உணவகங்கள் டீக்கடைகள் திறக்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று 11-ம் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது:- , கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இங்கு எந்த நேரத்திலும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வருகிறவர்களுக்கு இரவு நேரத்தில் உணவு வழங்குவது எங்களுடைய தலையாய கடமையாக இருக்கிறது. அதுபோலவே குழந்தைகளுடன் வருபவர்கள் பால் உள்ளிட்ட உணவு வாங்குவதற்கும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் சுற்றுலாத்தலங்களில் இது போன்று விதிகளை அமல்படுத்துவது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே கன்னியாகுமரிக்கு இந்த சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து குமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஆர் ஸ்டாலினை சந்தித்து நேரடியாக மனுவும் அளித்ததாக தெரிவித்தனர்.
Next Story