குருவாலப்பர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
Ariyalur King 24x7 |10 Jan 2025 12:51 PM GMT
குருவாலப்பர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்து சென்றனர்.
அரியலூர், ஜன.11- ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருப்பள்ளியெழுச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து பரமபத சொர்க்க வாசல் காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பெருமாளை வணங்கினர்.கோவில் உள் பிரகாரத்தில் வீரநாராயண பெருமாள் பிரகார உலா வந்து காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்,பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவில் ,சம்போடை கிராமத்தில் சொர்க்க பள்ளத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலிலும் பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் அதிகாலை முதலே கோவில் முன்னர் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
Next Story