வெள்ளகோவில் அருகே கடன் பிரச்சினையால் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

வெள்ளகோவில் அருகே கடன் பிரச்சினையால் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
வெள்ளகோவில் அருகே கடன் பிரச்சனையால் கிணறு வெட்டும் தொழிலளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் மேட்டுப்பாளையம் கிராமம் நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசு இவரது மகன் முருகன் (வயது 45). இவர் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். முருகனுக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி ராதா (40) இவருக்கு ஒரு மகள் உள்ளார் இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் சென்று தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி சங்கீதா (27) இவருக்கு 10,11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி மகன்களுடன் முருகன் நடுப்பாளையத்தில் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் அரசு பள்ளியில் ஏழாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். முருகன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாந்தவரத்தில் உள்ள தன் தாயார் கோவிந்தம்மாள் வீட்டுக்கு சென்ற முருகன் அங்கு வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக பேசியதாக தெரிகின்றது இந்நிலையில் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக முருகனின் மனைவி சங்கீதா கொடுத்த புகார் பேரில் வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story