திமுக சார்பில் சமூக வலைத்தள பயிற்சி முகாம்

தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் சமூக வலைத்தளப் பயிற்சி முகாம்
திமுக இளைஞர் அணிச் செயலாளர் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பேரில் தருமபுரி சட்டமன்றத் தொகுதி சார்பாக இளைஞர்களுக்கு சமூக வலைத்தளப் பயிற்சி முகாம் மாநில துணைச் செயலாளர் DMK S சீனிவாசன் பாத்த கோட்டா முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மதிமாறன் அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இளமாறன் அவர்களும் பயிற்சி அளித்தனர். 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் விதமாக பாக இளைஞர் அணி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் X- தளம், Facebook, Instagram பகுதிகளில் செயல்படுவது குறித்தும் களத்தைப் போலவே, சமூக வலைத்தளத்திலும் கழகப் பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி மற்றும் இன்பசேகரன் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story