மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
Dharmapuri King 24x7 |11 Jan 2025 2:35 AM GMT
தர்மபுரி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தர்மபுரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ந்தேதி குடியரசு தினம் ஆகிய நாட்கள் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுபான பார்கள். முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவற்றை விற்பனை இன்றி தில் மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல் பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story