அபிஷேக பொருட்களை வழங்க பக்தர்களுக்கு அழைப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசன அபிஷேகத்திற்கு பக்தர்கள் பொருட்களை வழங்கலாம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி 29ஆம் தேதி 13.01.2025 திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணிக்கு அருள்மிகு வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்திலும், ஏனைய நான்கு சபை அருள்மிகு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு நூறுகால் மண்டபத்தில் ஏக காலத்தில் விஷேச அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. மேலும் அபிஷேக பொருட்களான மஞ்சள்பொடி, திரவியப்பொடி, விபூதி, சந்தனம், தேன், பால், தயிர், இளநீர், பழ வகைகள் போன்றவற்றை நாளை இரவு 07.00 மணிக்குள் திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story