கோவை: மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் அறிவிப்பு !
Coimbatore King 24x7 |11 Jan 2025 4:10 AM GMT
பீஃப் பிரியாணி கடை வைத்திருந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பீப் உண்ணும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள முற்போக்கு இயக்கங்கள்.
கோவை உடையாம்பாளையம் பகுதியில் தள்ளு வண்டியில் மாட்டிறைச்சி பிரியாணி, சில்லி விற்பனை செய்து வந்த ரவி- ஆபிதா தம்பதியினரை பாஜக ஓபிசி பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் மிரட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பான சூழலை எழுப்பி உள்ளது. பாஜக நிர்வாகி மீது துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் நேற்றைய தினம் வழக்கு பதிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் ஆனது கைவிடப்பட்டது.இந்நிலையில் இன்று ஜி.என் மில் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்துள்ளனர். இது குறித்து பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், உடையாம்பாளையம் பகுதியில் அந்த தம்பதியினர் மாட்டிறைச்சி விற்பனை செய்கிறார்கள் என்ற காரணம் கூறி பாஜகவை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மிரட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி உள்ளார் என தெரிவித்தார்.
Next Story