மதுரையில் இறைச்சி விற்பனை செய்ய தடை

மதுரையில் இறைச்சி விற்பனை செய்ய தடை
மதுரையில் இறைச்சி விற்பனை தடை குறித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரையில் இறைச்சி விற்பனை தடை குறித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி நிர்வாகத் துறை அரசாணையின்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது. எனவே, அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யக் கூடாது. இறைச்சிக் கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் பொது சுகாதாரச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story