தமிழக முதல்வர் குமரி வருகை ; மேயர் தகவல்
Nagercoil King 24x7 |11 Jan 2025 4:23 AM GMT
குமரி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் எப் எம் ராஜரத்தினம் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய பேசுகையில், - கன்னியாகுமரி மாவட்ட கட்சி ஆய்வு பணிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எந்த நேரத்திலும் குமரிக்கு வரலாம். அதற்கு முன்பு அணி நிர்வாகிகள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் வர உள்ளார். இதனால் அனைவரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகரச் செயலாளர் ஆனந்த், அவை தலைவர் பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story