பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா
Kallakurichi King 24x7 |11 Jan 2025 4:38 AM GMT
விழா
தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் நடந்தது. காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியே பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், கள்ளக்குறிச்சி எம்.பி.,மலையரசன், நல்லாப்பிள்ளை, அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம் சுந்தர், பேரூராட்சி மன்ற துணை சேர்மன் சங்கர், முன்னாள் அரிமா சங்கத் தலைவர் அரங்க வேல்முருகன், நகர ஜெ., பேரவை செயலாளர் வேல் நம்பி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சிவகுமார், முருகன், சரவணன், தனபால், கோமதுரை, மோகன், செந்தில், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story