கோவை: ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்டும் மர்ம நபர்கள் !
Coimbatore King 24x7 |11 Jan 2025 4:47 AM GMT
நொய்யல் ஆற்றங்கரையில் குப்பைகள் மற்றும் கோழிக்கறிவுகளை இரவு நேரத்தில் கொட்டி செல்லும் மர்ம நபர்கள்.
கோவை,சூலூர் அருகே ராவத்தூரில் நொய்யல் ஆற்றங்கரையில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி செல்வதாகவும் இது பற்றி இருகூர் பேரூராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மொக்கை சாமி,பாலசுப்ரமணியம், பொன்னுசாமி,வையாபுறியப்பன், ரவி,தேவராஜ், மோகனசுந்தரம்,மோகன்ராஜ் உள்ளிட்டோர் தெரிவித்தனர். புகார் தெரிவித்தவுடன் பேரூராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதாகவும், ஆனால் மீண்டும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கோழிக்கழிவு மற்றும் குப்பைகளை அப்பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் நொய்யல் ஆற்றங்கரை வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று நொய்யல் ஆற்றங்கரையில் கூடி ஜேசிபி மூலம் குப்பைகளை அகற்ற முனைந்தனர். இது பற்றி பேரூராட்சி அதிகாரிகள் கூறும் பொழுது இனி வரும் காலத்தில் குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்தப்படும் அவ்வாறு கொட்டப்படும் வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் மேலும் அதற்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Next Story