கோவை: விண்வெளி ஆராய்ச்சி கூடங்கள்- தமிழகத்தில் புதிய விதை !

கோவை: விண்வெளி ஆராய்ச்சி கூடங்கள்- தமிழகத்தில் புதிய விதை !
தமிழகத்தில் 2000 பள்ளிகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை ஆராய்ச்சி கூடங்களை அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2000 பள்ளிகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை ஆராய்ச்சி கூடங்களை அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.கோவை, துடியலூர் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மேம்பாடு கருத்தரங்கில் நேற்று பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்த சந்திரயான் திட்டம் போன்ற பல்வேறு சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது. இதேபோல், விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் சாதனையை இந்தியா செய்தால், உலகின் நான்காவது நாடு என்ற பெருமையைப் பெறும் என்றார்.
Next Story