ராணிப்பேட்டை ஆட்சியில் புதிய உத்தரவு!

ராணிப்பேட்டை ஆட்சியில் புதிய உத்தரவு!
ராணிப்பேட்டையில் மதுபான கடைகள் இயங்காது!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மது பான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மது பான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினமான 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூடவேண்டும். அன்றைய தினங்களில் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story