உருவ பொம்மை எரிப்பு
Erode King 24x7 |11 Jan 2025 6:07 AM GMT
தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து ஈரோட்டில் 2-வது நாளாக சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது எஸ்.பி.அலுவலகத்திலும் புகார் மனு
கடலூர் மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற வருகிறது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி மனு வழங்கினர். இதேபோல் நேற்று பன்னீர்செல்வம் பார்கில் சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை திராவிடர் பெரியார் கழகத்தினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இன்று இரண்டாவது நாளாக ஈரோடு தாலுகா அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியை சேர்ந்த 10 நிர்வாகிகள் ஒன்று திரண்டு திடீரென சீமானின் உருவ பொம்மையை நடுரோட்டில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்தனர். இதைப்போல் இன்று ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் சமூக நீதி மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் வந்து சீமானை கைது செய்ய வலியுறுத்தி மனு வழங்கினர்.
Next Story