தேர்தல் தொடர்பான வினாடி வினா போற்றி நடைபெற உள்ளது
Virudhunagar King 24x7 |11 Jan 2025 6:36 AM GMT
தேர்தல் தொடர்பான வினாடி வினா போற்றி நடைபெற உள்ளது
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின் படி சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ முன்னிட்டு தேசிய வாக்காளர் தினமான 25.01.2025 அன்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் 25.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாநில அளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.16 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் குழுக்களாகவே மட்டும் கலந்து கொள்ள முடியும். ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் நபர்கள் 20.01.2025 தேதிக்குள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025/ என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் நாளான்று பதிவு செய்த நபர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையுன் வர வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்வி கேட்கப்படும். போட்டியானது OMR தாளில் பல சுற்றுகளாகவும், இறுதி சுற்று நேரடி கேள்விகளாக கேட்கப்படும்.
Next Story