வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
![வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்](https://king24x7.com/h-upload/2025/01/11/757342-1000168779.webp)
![Chengalpattu King 24x7 Chengalpattu King 24x7](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், கடந்தாண்டு டிச., 31-ம் தேதி வரை, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, வரும் மார்ச் மாதம் 10ம் தேதிக்குள், அனைத்து வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவக்கி, வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Next Story