விருதுகள் பெற்ற இளைஞருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!

விருதுகள் பெற்ற இளைஞருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
தூத்துக்குடியில் சிறந்த செவிலியர், இளம் தொழிலதிபர் உள்ளிட்ட விருதுகள் பெற்ற இளைஞருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சிறந்த செவிலியர், இளம் தொழிலதிபர் உள்ளிட்ட விருதுகள் பெற்ற இளைஞருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர், பக்கவாதத்தால் பாதிப்படைந்தவர்கள், முதியவர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களை பராமரித்தல் என பல்வேறு பணிகளுக்காக சிறந்த சமூக சேவைக்கான விருதினை பெற்றுள்ளார். அவரது சேவையை பாராட்டி மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார். மாமன்ற உறுப்பினர் முத்துமாரி உடனிருந்தார். இதுகுறித்து ரஞ்சித் குமார் கூறுகையில், நான் இந்த சேவையை 16 வருடம் செய்கிறேன். எனக்கு மிகவும் பிடிச்ச சேவை இந்த நர்சிங் சேவை. நான் இப்போது அரசு லைசென்ஸ் வாங்கி நான் தனியாக இதை செயல் படுத்துகிறேன். வெளிநாடுகளுகக்கும் செற்றுள்ளேன். இது மூலமாக என்ன பயன் என்றால். வீடுகளில் பக்கவாதம், முதியோர், பேறுகால கவனிப்பு, வீட்டிற்கு சென்று யூரின் டியூப், மற்றும் புண்கள் சுத்தம் செய்து கட்டு போடுதல், சிறு குழந்தை பராமரிப்பு, பிள்ளைகள் வெளிநாடுகளிள் இருப்பார்கள் அவர்கள் பெற்றோர்களை கனிவாக கவனிப்பு, மற்றும் யாரும் இல்லாத முதியோர்களை நாங்களே விடுதியில் சேர்த்து பராமரிப்பது போன்ற சேவைகளை செய்துவருகிறேன். என்னிடம் இப்போது 60 ஆண், பெண் இருப்பாலரும் பணியில் உள்ளனர். இந்த சேவைகளுக்காக இந்த வருடம், best home care, இளம் தொழில் அதிபர், மற்றும் சிறந்த செவிலியர் விருது என மூன்று விருதுகள் பெற்றுள்ளேன் என்றார்.
Next Story