அதிமுக நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Dharmapuri King 24x7 |11 Jan 2025 10:05 AM GMT
தர்மபுரி நகரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வருகின்ற ஜனவரி 17ம் தேதி முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 108ம் ஆண்டு பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. அதனையடுத்து இன்று தருமபுரி நகர கழகம் சார்பில் எவ்வாறு சிறப்பாக கொண்டாடப்படுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர கழகம் சார்பில் நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நகரத்திற்குட்பட்ட 33 வார்டுகளிலும் அன்னதானம் மற்றும் நலதிடட்ட உதவிகள் வழங்கி எம்ஜிஆரின் பிறந்தநாளை கொண்டாடப்பட வேண்டும் என நகர செயலாளர் ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story