மழலையர் பள்ளியில் பொங்கல் விழா

நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட லளிகம் பகுதியில் உள்ள தனியார் நர்சரி மற்றும் மழலையர் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட லளிகம் கிராமத்தில் அமைந்துள்ள விவேகானந்தா நர்சரி மற்றும் மழலையர் பள்ளியில் இன்று ஜனவரி 11 பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது சின்ன சிறிய குழந்தைகளின் வண்ணமயமான ஆடல்கள் மற்றும் பாடல்கள் காண்போரை மகிழ்ச்சி அடைய வைத்தது குறிப்பாக மின்சாரம் தாக்கிய நபர்களுக்கு செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள் மற்றும் வனப்பகுதியில் காயமடைந்தவரை மீட்கும் பணிகள் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் மழலையர்கள் செய்து காட்டியது காண்போரை வியப்புக்குள்ளாக்கியது. இந்த நிகழ்வில் மழலைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story