குமரியில் வணிகர்கள் போராட்டம் அறிவிப்பு
Nagercoil King 24x7 |11 Jan 2025 11:05 AM GMT
மார்த்தாண்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடந்த 6- .ம் தேதி முதல் இரவு 11மணிக்கு மேல் கடைகள் மூட வேண்டும் எனவும் மீறி திறந்தால் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இயங்கி கொண்டிருந்த சில தேநீர் கடைகள் இரவு நேரத்தில் வற்புறுத்தலாக அடைக்க போலீசார் முயன்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணை தலைவர் ஜார்ஜ் தலைமையில் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர் . தொடர்ந்து காவல் கண்காணிப்பளர் ஸ்டாலின் விடுத்த உத்தரவு தமிழ்நாடு அரசின் உத்தரவையும் , நீதிமன்றத்தின் உத்தரவை மீறுகின்ற செயல் எனவும், தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் திறந்து இருக்கலாம் என அரசும் நீதிமன்றமும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இது அமுல்படுத்தப்பட்டு வருகிறது, எனவே குமரி மாவட்டத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் . இல்லை என்றால் இந்த உத்தரவை வாபஸ் வாங்கும் வரை போராட்டத்தை நடத்த உள்ளோம் என என தெரிவித்தனர். வணிகர்கள் கலந்துகொண்டனர்.
Next Story