பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம். மாணவ-மாணவியர் உற்சாகம்.

பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம். மாணவ-மாணவியர் உற்சாகம்.
பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம். மாணவ-மாணவியர் உற்சாகம். கரூர் வெண்ணெய்மலை பகுதியில் செயல்படும் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமையில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன்முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் ஒன்பது பானைகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் பெற்றோர்களுக்கு பானை உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் சேமித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இவ்விழாவில் பரணி பார்க் முதல்வர் .சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் முதல்வர் சாந்தி, துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story