ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

கிராம பொது மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினார் வேந்தர் சீனிவாசன்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதுநடுவலூர் கிராம பொது மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில், புதுநடுவலூர் ஊராட்சியைச் சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது. பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை தொடக்கி வைத்தார். புதுநடுவலூர் ஊராட்சியைச் சேர்ந்த 1,000 குடும்பங்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பொங்கலிடும் பானை, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ உருண்டை வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், பாசி பருப்பு மற்றும் 1 ஜோடி கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி மற்றும் கிராம முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story