இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பேட்டி
Dindigul King 24x7 |11 Jan 2025 12:11 PM GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர செயலாளர் கிருஷ்ணசாமி பேட்டி
திண்டுக்கல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர செயலாளர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஜனவரி 4ந் தேதி அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் பிரகாஷ் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் சாதிய வன்கொடுமையும் பத்தாம் வகுப்பு படித்த ஆகாஷ் என்ற மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் பள்ளி கல்லூரி மாணவர்களின் மரணங்களில் மர்மம் இருப்பதாக வரும், தனி விசாரணை கமிஷன் அமைத்து மாணவர்கள் இறப்பு குறித்து உண்மை தன்மை விசாரணை நடத்தப்பட வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை பின்பு தான் ரேணுகாதேவி பள்ளியில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சாதிய வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். அதேபோல் பழனியில் சித்தரவு பகுதியில் வண்டி பாதையை ஒரு சில சமுதாயத்திற்கு பட்டா போட்டு கொடுத்து பாதை மறைத்துள்ளனர்இது குறித்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து நீதி பெற்றுள்ளோம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். இந்நிலையில் தலித் பெண் ஒருவர் அப்பகுதியில் பாதையை கடக்கும் பொழுது தாக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story