விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க தமிழக அரசு உத்தரவு!- தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு.

விவசாய பயிர்களை சேதப்படுத்தும்  காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க தமிழக அரசு உத்தரவு!- தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு.
யானை, மான் ,மயில் மற்றும் காட்டுப்பன்றி ஆகியவைகள் தற்போது அதிக அளவில் விவசாய பயிர்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள தானியங்களை பெருமளவில் சேதப்படுத்தி வருகிறது இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் சேதத்தை அறிந்து மதிப்பீடு செய்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்
தமிழக விவசாயிகள் நெல்,மக்கச்சோளம், தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக காட்டுப்பன்றிகளால், விவசாயிகள் தினந்தோறும் அல்லல்பட்டுவருகின்றனர்... பயிர்கள் துளிர்விடும் பருவத்திலேயே சேதப் படுத்தும் காட்டுப்பன்றிகளால், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.கேரளாவைப்போல், தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அரசு அனுமதி அளிக்கவேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதன் எதிரொலியாக காப்புக்காடுகளிலிருந்து ஒன்று முதல் மூன்று கி.மீ., தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால், வனத்துறையினர் சுட அனுமதி அளிக்கப்படுவதாக, அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
தமிழக வனப் பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் சாகுபடி செய்த பயிர்களை, வன விலங்கான காட்டுப் பன்றி அடிக்கடி சேதப்படுத்தி வந்துள்ளது.இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரில், வன விலங்கான காட்டுப் பன்றி விவசாய நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்தும் போது விவசாயிகள் வனத்துறை மூலம் அதனை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் அனுமதி வழங்கியுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் வரவேற்கதக்கதாக உள்ளது. எனினும் வன விலங்கான
யானை, மான் மற்றும் தேசியப் பறவையான மயில் ஆகியவைகள் தற்போது அதிக அளவில் விவசாய பயிர்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள தானியங்களை பெருமளவில் சேதப்படுத்தி வருகிறது இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் சேதத்தை அறிந்து மதிப்பீடு செய்து இழப்பீட்டு தொகையை வனத் துறை இடம் தெரிவித்தால், அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வனத் துறை மூலம், பயிர் சேதத்திற்கு உண்டான முழு இழப்பீடு தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Next Story